ஏக்கத்துடன்

பொங்கலென்று  வாழ்த்துவதா வேண்டாமா
பொங்கல் வைப்பதா வேண்டாமா
குழப்பத்தில் நான்
துயரத்தில் விவசாயி


நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
பசி இல்ஆகுக பிணீகேன் நீங்குக
அறநனி சிறக்க அல்லது கெடுக
அரசு முறைசெய்க களவு  இல்ஆகுக
நன்றுபெரிது சிறக்க தீது இல்ஆகுக
மாரி வாய்க்க வளநனி சிறக்க
விவசாயி வாழ விளைநிலம் காக்க
என விழைகிறோமே 
ஏக்கத்துடன் 


நெற்பல பொலிக என்ற பழைய பதிவிலிருந்து,சிறிது மாற்றத்துடன். அன்றும் இன்றும் மனநிலையில் தான் எவ்வளவு மாற்றம்! வேதனையே அதிகமாக இன்று.

9 கருத்துகள்:

  1. அனைவருக்கும் எனது உளம் நிறைந்த உழவர் (பொங்கல்) திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமை சகோ!/கிரேஸ்!! வரிகளைத்தான் சொன்னோம். ஆனால் நிலைமையோ வேதனை!

    பதிலளிநீக்கு
  3. இனிய தைப்பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. விவசாயியின் துயரம் வேதனைக்குரியது......

    பதிலளிநீக்கு

  5. நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை என்பார்கள். சோறுடைக்கும் சோழநாடு வளமிழந்து காய்ந்து கிடப்பதைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. தண்ணீரை வைத்து அரசியல் நடத்தும் மனிதர்கள் மீது கோபமும் வருகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...